தேசிய செய்திகள்

டெல்லி முதல்வர் நாளை சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறார்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சந்திரபாபு நாயுடுவை சந்திக்க உள்ளார்.

புதுடெல்லி,

ஆந்திர பிரதேசத்தின் சிறப்பு பிரிவு நிலைமை பாதுகாப்பதற்காக திங்கள்கிழமை இரவு இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்த சந்திரபாபு நாயுடு பாராளுமன்றத்தில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

மேலும் பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அவர், சரத்பவார்(என்.சி.பி), ஃபாருக் அப்துல்லா(ஜேகே என்.சி), சுப்பிரியா சுலே (என்.சி.பி), ஜோதிராதித்யா சிந்தியா (காங்கிரஸ்), ஜிதேந்தர் ரெட்டி (டி.ஆர்.எஸ்) ), எம். வீரப்ப மொய்லி (காங்கிரஸ்) மற்றும் ராஜீவ் சாதவ் (காங்கிரஸ்). மேலும் அனுப்ரியா பட்டேல் (அப்னா தால்), ஹர்சிம்ரத் கவுர் பாடல் (ஷிரோமணி அகலி தால்) மற்றும் தாரிக் அன்வர் (என்.சி.பி.) ஆகியேரை சந்தித்தார்.

இதற்கிடையில், ஆந்திரப்பிரதேசத்திற்கான சிறப்புப் அந்தஸ்து வழங்கும் கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஆந்திர பவனில் வைத்து நாளை (புதன்கிழமை) சந்திக்கிறார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...