தேசிய செய்திகள்

டெல்லியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து தாக்கியவனை போலீஸ் கைது செய்தது

புதுடெல்லியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் அதிகாரி மகன் ரோஹித்தை போலீஸ் கைது செய்துள்ளது.

புதுடெல்லி,

காவல்துறையில் அதிகாரியாக உள்ள அசோக் சவுத்ரியின் மகன் ரோஹித் சிங் தோமர் இளம்பெண் ஒருவரை கொடூரமான முறையில் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வீடியோ வெளியாகிய நிலையில் ரோஹித்துடனான திருமணத்தை ரத்து செய்த பெண் ஒருவர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. ரோஹித் என்னை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் தாக்கினான் என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து போலீஸ் ரோஹித்தை கைது செய்துள்ளது. ரோஹித்தை டெல்லி திலக் நகரில் போலீஸ் கைது செய்துள்ளது, அவனை நீதிமன்றம் ஒருநாள் போலீஸ் காவலுக்கு அனுப்பியுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்