தேசிய செய்திகள்

டெல்லியில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்; பிரதமருக்கு கெஜ்ரிவால் கடிதம்

டெல்லியில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாட்டின் தலைநகர் டெல்லியில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறியுள்ள கெஜ்ரிவால், அதுபோன்ற ஒரு சூழலை தவிர்க்க தனது அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

டெல்லிக்கு மின் விநியோகம் அளிக்கும் நிறுவனங்களுக்கு தேவையான நிலக்கரி மற்றும் எரிவாயு கிடைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு , தான் கடிதம் எழுதியுள்ளதாகம் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே நிலக்கரி தட்டுப்பாடு நீடிப்பதாக பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாகவும் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்