தேசிய செய்திகள்

சுனந்தா புஷ்கர் மரண வழக்கு; சசி தரூர் விடுவிப்பு

சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் இருந்து சசி தரூர் எம்.பியை விடுவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள சொகுசு விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரின் மரணம் தொடர்பாக சசி தரூர் மீது சந்தேகம் எழுந்த நிலையில், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 498-ஏ, 306 பிரிவுகளின் கீழ் டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் இருந்து சசிதரூர் எம்.பி-யை விடுவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது