தேசிய செய்திகள்

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து நிலவர அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு டெல்லி கோர்ட்டு உத்தரவு

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்த நிலவர அறிக்கையை 2 நாட்களுக்குள் தாக்கல் செய்ய டெல்லி காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் மீதான இளம் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை கைது செய்யக்கோரி கடந்த மாதம் 23-ந்தேதியில் இருந்து டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே இந்த விசாரணையை கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட வீராங்கனைகளின் வாக்குமூலங்களை பதிவு செய்யவும் கோரி டெல்லி கோர்ட்டில் மல்யுத்த வீராங்கனைகள் தர்ப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்த நிலவர அறிக்கையை 2 நாட்களுக்குள் தாக்கல் செய்ய டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு