தேசிய செய்திகள்

டெல்லி; கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் சந்தைகளில் கூடும் மக்களால் தொற்று பரவும் அபாயம்

டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் நேற்று 0.09 சதவிகிதமாக உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 0.09 சதவிகிதமாக உள்ளது. தொற்று பரவல் கணிசமாக குறைந்துள்ளதால், அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், டெல்லியின் காசியாபூர் காய்கறி சந்தையில் கொரோனா தடுப்பு விதிகளை மதிக்காமல் மக்கள் அதிக அளவில் கூடினர். பெரும்பாலானோர் மாஸ்க் கூட அணியாமல் சென்றதை காண முடிந்தது. 3-வது அலை அச்சுறுத்தல் உள்ள நிலையில், மக்கள் கொரோனா விதிகளை காற்றில் பறக்க விட்டு செல்வது கவலையளிப்பதாக உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு