தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா

டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா, கடந்த 14ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இருப்பினும், கடந்த 25 ஆம் தேதி அவருக்கு காய்ச்சல் மற்றும் சுவாசத்தில் சிரமம் ஏற்பட்டதால் லோக்நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கொரோனா வைரஸ் தொற்று உள்ள நிலையில், அடுத்தகட்ட சோதனை செய்து பார்த்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சலும் இருப்பது உறுதியானது. அதையடுத்து மருத்துவர்கள் மனிஷ் சிசோடியாவை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று கொரோனா பரிசோதனை செய்தார் .அதில் தொற்று இல்லை என்று உறுதியானது அதையடுத்து அவர் மேக்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் அவர் ஒரு வாரம் ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்