புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்தது. மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து அரசியல் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால், அவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பரூக் அப்துல்லாவை விடுதலை செய்யக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.