தேசிய செய்திகள்

டெல்லி திமுக அலுவலகம் திறப்பு : அமித்ஷாவுக்கு அழைப்பு

திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயம் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது .

டெல்லியில் கட்டப்பட்டுள்ள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயம் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது .

கடந்த ஜனவரி மாதம் டெல்லி அண்ணா அறிவாலயம் திறக்கப்பட இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக திறந்து வைக்கப்படவில்லை. இந்தநிலையில் வருகிற (ஏப்ரல்) 2-ந்தேதி டெல்லி அண்ணா அறிவாலயத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார். இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 2-ந்தேதி டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்நிலையில் டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தொழில்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சென்று அழைப்பிதழை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு