தேசிய செய்திகள்

டெல்லி: போலி ஆஸ்பத்திரி கண்டுபிடிப்பு - டாக்டர் உள்பட 10 பேர் கைது

டெல்லி அருகே போலி ஆஸ்பத்திரி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் டாக்டர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருகிராம்,

டெல்லி அருகே அரியானா மாநில எல்லைக்குட்பட்ட குருகிராம் நகரில் பிலாஸ்பூர் பகுதியில் போலி ஆஸ்பத்திரி இயங்கி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, முதல்-மந்திரியின் பறக்கும் படையும், மாநில சுகாதாரத்துறையும் இணைந்து அந்த ஆஸ்பத்திரியில் அதிரடி சோதனை நடத்தின.

ஸ்ரீ பாலாஜி மருத்துவமனை மற்றும் கண் சிகிச்சை மையம் என்ற பெயரிலான அது 24 மணி நேர ஆஸ்பத்திரி ஆகும். ஆனால், எந்த உரிமமும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வந்தது. 15 படுக்கைகள் இருந்தன.

மகப்பேறு மருத்துவர் இல்லாமல் பிரசவங்களும், முறையான டாக்டர்கள் இல்லாமல் அறுவை சிகிச்சைகளும் நடந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தர்மேந்தர் என்ற எம்.பி.பி.எஸ். டாக்டரின் பெயர், முத்திரையை பயன்படுத்தி, அங்கிருந்தவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இதுதொடர்பாக, தர்மேந்தர், ஆஸ்பத்திரியை நடத்தும் பிட்டு யாதவ், போலி டாக்டர் சோனு உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மருந்துகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்