தேசிய செய்திகள்

டெல்லியில் வருமான வரி அலுவலகத்தில் தீ விபத்து

டெல்லியில் வருமான வரி அலுவலகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் வருமான வரி துறை அலுவலகம் அமைந்துள்ளது. இங்குள்ள விற்பனை வரி அலுவலக கட்டிடத்தின் 13வது தளத்தில் உள்ள அறை எண் 115ல் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றிய தகவல் அறிந்து 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளன. அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமுடன் ஈடுபட்டு உள்ளனர். அலுவலக பணிநேரம் என்பதனால் ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் தீ அணைக்கப்பட்டு விட்டது. இதனால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.

இந்த வருடம் ஏப்ரலில் வருமான வரி துறை அலுவலகத்தில் உள்ள ஐ.பி. பவன் பகுதியருகே கட்டிடமொன்றின் 4வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இருந்து 7 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். கடந்த மார்ச் மாதத்திலும் வருமான வரி துறை அலுவலகம் அருகே விகாஸ் பவனின் 6வது தளத்தில் இதேபோன்று தீ விபத்து ஏற்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்