தேசிய செய்திகள்

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ரவி தாஹியாவின் பெயரை டெல்லி அரசு பள்ளிக்கு சூட்டி கவுரவம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ரவி தாஹியாவின் பெயரை அவர் படித்த பள்ளிக்கு டெல்லி அரசு சூட்டியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ரவி தாஹியா டெல்லியின் ராஜ்கியா பால் வித்யாலயாவில் படித்து உள்ளார்.

டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா, தனது கடின உழைப்பின் வழியே டெல்லி அரசு பள்ளி மாணவர் ஒருவர் தேசத்திற்கான அடையாள இளைஞராகியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

இதனை முன்னிட்டு ரவி தாஹியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவர் படித்த பள்ளியின் ராஜ்கியா பால் வித்யாலயா என்ற பெயரானது, ரவி தாஹியா பால் வித்யாலயா என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது என்று டெல்லி அரசு அறிவித்து உள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை