புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று முன்தினம் அயோத்திக்கு சென்று ராம ஜென்மபூமியில் வழிபட்டார். இந்தநிலையில், நேற்று அவரது தலைமையில் டெல்லி மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், டெல்லி அரசின் மூத்த குடிமக்களுக்கான இலவச ஆன்மிக தலங்கள் சுற்றுலா திட்டத்தில் அயோத்தியையும் சேர்த்துக்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ராமேஸ்வரம், சீரடி, மதுரா, திருப்பதி, துவாரகை, ஹரித்துவார், ஜகநாத் பூரி உள்ளிட்ட தலங்கள், இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. அடுத்த ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.