கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட சிறை கைதிகளுக்கு தடுப்பூசி

டெல்லி சிறைத்துறை, 18-44 வயதுடைய சிறை கைதிகளுக்கு தடுப்பூசி போடும் பணியை நேற்று தொடங்கி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கைதிகள் மத்தியில் கொரோனா வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன்படி 1,000 கைதிகள் ஜாமீனில் அனுப்பப்பட்டு உள்ளனர். 600 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இருந்தாலும் டெல்லி ஜெயில்களில் 19 ஆயிரத்து 500-க்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததால், கொரோனா பரவல் அதிகமாகவே இருந்து வந்தது. இவர்களில் 2,500 பேர் 45 வயதுக்கு மேற்பட்ட கைதிகளாவர்.

டெல்லியில் உள்ள 3 சிறைகளில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கியதில் இருந்து இதுவரை 1,472 பேருக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து அடுத்தகட்டமாக 18-45 வயதுடைய கைதிகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக நேற்று தடுப்பூசி பணி தொடங்கப்பட்டு உள்ளது. திகாரில் நேற்று மட்டும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது