தேசிய செய்திகள்

யுனெஸ்கோ அந்தஸ்து: மத்திய அரசிற்கு டெல்லி அரசு வேண்டுகோள்

டெல்லிக்கு யுனெஸ்கோவின் பாரம்பரிய நகர அந்தஸ்தைப் பெற்றுத்தர மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி

இந்த விஷயத்தில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மாவிற்கு கடிதம் எழுத மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மணீஷ் சிசோடியா முடிவு செய்துள்ளதாக மூத்த மாநில அதிகாரி தெரிவித்தார். மாநில அரசு கூறியபடி யுனெஸ்கோவிடம் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நியமன பரிந்துரைப்பு வழங்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு யுனெஸ்கோ இது குறித்து முடிவெடுக்க இரண்டு நாட்கள் இருக்கையில் நியமனத்தைத் திரும்பப்பெற்றது.

சென்ற மாதம் அகமதாபாத் இதே அந்தஸ்தைப் பெற்றது. கடந்த 2014 ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி அரசு மாநில அரசும், துணைநிலை ஆளுநரும் பரிந்துரைகளை வழங்கினர். என்றாலும் மத்திய அரசு காரணம் கூறாமல் நியமனத்தைத் திரும்ப பெற்றது. மீண்டும் இது குறித்து மத்திய அரசுடன் மாநில அரசு பேசும் என்று கூறப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை