புதுடெல்லி,
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார். இதனை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட் மாற்றியது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட், மனு குறித்து ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் சசிகலா ஆகியோர் 3 வாரத்தில் பதில் அளிக்கவும், அதில் இருந்து 4 வாரங்களில் முடிவெடுக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.