தேசிய செய்திகள்

2 ஜி வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சிபிஐ, அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுக்கள் ஏற்பு

அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தினமும் 2 ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், தனியார் தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், இதனால், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், அப்போதைய மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சரும், தி.மு.க.,வைச் சேர்ந்தவருமான, ராஜா, அந்த கட்சியின் எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த, டெல்லி, சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரமில்லை என கூறி, அனைவரையும் விடுதலை செய்து, 2017 டிசம்பரில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், 2 ஜி வழக்கை விரைவாக விசாரிக்க ஒப்புக்கொண்டது. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடர் விசாரணை நடைபெறும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு