இந்த மனு தொடர்பான விசாரணை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சி.ஹரி சங்கர் அமர்வு முன்பு நடைபெற்றது. டெல்லி மருத்துவர் சங்கம் மனுவை பரிசீலித்த நீதிபதி, பாபா ராம்தேவ் ஆஜராக சம்மன் அளிக்கவும், மனு தொடர்பாக பதில் அளிக்கவும் உத்தரவிட்டார்.
மேலும் வழக்கு விசாரணையை ஜூலை 13-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். அடுத்த விசாரணை வரை, எவ்வித கருத்தையும் பாபா ராம்தேவ் தெரிவிக்கக் கூடாது என்றும் வாய்மொழி உத்தரவை பிறப்பித்தார்.