தேசிய செய்திகள்

டெல்லி முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு!

டெல்லி முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின், கடந்த 2022ம் ஆண்டு மே 30ம் தேதி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டு, தற்போது இந்த வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ளார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி தினேஷ் குமார் சர்மா அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், டெல்லி முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்தார்.

வழக்கு முக்கிய கட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில் சத்யேந்திர ஜெயினுக்கு ஜாமின் வழங்கினால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு ஏற்படலாம் எனவும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) நிபந்தனைகளை அழிக்க முடியாது என நீதிபதி கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை