தேசிய செய்திகள்

டெல்லி மதுபான கொள்கை வழக்கு: கவிதா மீது சி.பி.ஐ. கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் கவிதா மீது சி.பி.ஐ. இன்று டெல்லி கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகா ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) தலைவர்களில் ஒருவருமான கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 15-ந்தேதி கைது செய்தனர்.

இதையடுத்து கவிதா தற்போது நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் கவிதா மீது சி.பி.ஐ. இன்று டெல்லி கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.  

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு