தேசிய செய்திகள்

டெல்லியில் ஊரடங்கு மேலும் ஒருவாரத்துக்கு நீட்டிப்பு: முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கொரோனாவின் தாக்கத்துக்கு தலைநகர் டெல்லியும் தப்பவில்லை. மின்னல் வேகத்தில் பரவிய கொரோனா பாதிப்பை சமாளிக்க டெல்லியில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு அடுத்தடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் டெல்லியில் கொரோனாவின் தாக்கம் முன்பைவிட சற்று தணியத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தொற்று பரவலை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் டெல்லியில் மேலும் ஒருவாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இம்முறை ஊரடங்கு மிகக்கடுமையாக இருக்கும் எனவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனவும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படாது என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை