தேசிய செய்திகள்

கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் இந்து அமைப்பினர் போராட்டம்

கோர்ட்டு உத்தரவின்படி அந்த பகுதியில் இருந்த அனுமன் கோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி வடக்கு மாநகராட்சியால் இடித்து தள்ளப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள சாந்தினி சவுக் பகுதியை அழகுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக கோர்ட்டு உத்தரவின்படி அந்த பகுதியில் இருந்த அனுமன் கோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி வடக்கு மாநகராட்சியால் இடித்து தள்ளப்பட்டது.

இதை கண்டித்து விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தளம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று பேரணியாக அந்த பகுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை பேரிகார்டுகள் அமைத்து தடுத்து நிறுத்தினார்கள்.

மேலும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை காரணம் காட்டி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மேற்படி இந்து அமைப்புகளை சேர்ந்த 27 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்