தேசிய செய்திகள்

டெல்லி மாநகராட்சி தேர்தல் - பா.ஜ.க.வின் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

டெல்லி மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு 2-வது கட்டமாக 18 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் வருகிற டிசம்பர் 4-ந்தேதி டெல்லியில் உள்ள 250 வார்டுகளுக்கான மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க. மற்றும் ஆளும் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி காணப்படுகிறது.

இதனை முன்னிட்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்களை அரசியல் கட்சிகள் பல்வேறு கட்டங்களாக வெளியிட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் ஒரே கட்டமாக நேற்று வெளியிடப்பட்டது.

அதே போல் ஆம் ஆத்மி கட்சி தங்கள் வேட்பாளர்களின் பட்டியலை 2 கட்டங்களாக வெளியிட்டது. மேலும் பா.ஜ.க. சார்பில் 232 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து 2-வது கட்டமாக 18 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்