தேசிய செய்திகள்

டெல்லி: தொடக்க பள்ளிகளை திறக்க கோரி முதல்-மந்திரி வீடு முன் பெற்றோர் போராட்டம்

டெல்லியில் முதல்-மந்திரி வீட்டின் முன் பெற்றோர்-ஆசிரியர்கள் குழு ஒன்று தொடக்க பள்ளிகளை திறக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பாதிப்புகள் குறைந்த நிலையில், கடந்த 1ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்தது. இதன்படி, 9 முதல் 12 வரையிலான வகுப்புகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

எனினும், வகுப்புகளுக்கு மாணவர்கள் வருவது பற்றி பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம் என்றும், மாணவர்களை வரும்படி கட்டாயப்படுத்தவில்லை என்றும் தெரிவித்தது.

இந்த நிலையில், டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் வீட்டின் முன் திரண்ட பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய குழு ஒன்று, தொடக்க பள்ளிகள் மற்றும் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளை திறக்க வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு