தேசிய செய்திகள்

டெல்லி: இன்ஸ்டாகிராமில் இளம்பெண்ணின் போலி கணக்கை துவங்கி ஆபாச பதிவுகளை வெளியிட்ட நபர் கைது

பெண்ணின் பெயர் மற்றும் புகைப்படத்தை வைத்து போலி கணக்கு ஒன்றை துவங்கி அதில் ஆபாச பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவருக்கு, கடந்த 2018-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் செயலி மூலம் மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த கோபால் கராலியா என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்த நிலையில், கோபால் கராலியா அந்த இளம்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்த தொடங்கியுள்ளார்.

இதையடுத்து அந்த இளம்பெண் கோபாலிடம் பேசுவதை தவிர்க்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோபால், இளம்பெண்ணை பழிவாங்கும் நோக்கில் அந்த பெண்ணின் பெயர் மற்றும் புகைப்படத்தை வைத்து இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு ஒன்றை துவங்கி அதில் ஆபாச பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த இளம்பெண், இது குறித்து வடக்கு டெல்லி சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், கோபாலின் மொபைல் நம்பரை வைத்து அவரது இருப்பிடத்தை கண்டறிந்து அவரை அதிரடியாக கைது செய்தனர். 

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்