தேசிய செய்திகள்

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8 குறைப்பு

தலைநகர் டெல்லியில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.8 குறைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் பெட்ரோல் மீதான வாட் வரி 30 சதவீதத்தில் இருந்து இருந்து 19.40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.8 குறைந்துள்ளது. இந்த விலைக்குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும். முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது.

இதையடுத்து, கலால் வரியை குறைத்து பெட்ரோல் விலை ரூ.5-ம் டீசல் விலை ரூ.10- ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. டெல்லியில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.97- க்கு விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ.86.67- ஆக விற்பனை செய்யப்படுகிறது. பெருநகரங்களில் மும்பையில் தான் எரிபொருள் விலை அதிகமாக விற்பனையாகிறது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை