புதுடெல்லி
குடியரசு நாளன்று டிராக்டர் பேரணியின்போது செங்கோட்டையில் கொடியேற்றிய பஞ்சாபை சேர்ந்த தீப் சித்துவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.தீப் சித்துவுடன் டெல்லி கலவரத்திற்கு காரணமான ஜுக்ராஜ் சிங், குர்ஜோத் சிங், குர்ஜாந்த் சிங் உள்ளிட்ட மூவர் குறித்தும் தகவல் அளிப்பவர்களுக்கு காவல்துறை பரிசு அறிவித்துள்ளது.
மேலும் வன்முறையில் ஈடுபட்ட ஜெய்பீர் சிங், புட்டா சிங், சுக்தேவ் சிங், இக்பால் சிங் ஆகியோர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் தீப் சித்து, வேளாண் போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை என்று வீடியோ வெளியிட்டது சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து அவரைக் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு காவல்துறை சன்மானம் அறிவித்துள்ளது .