புது டெல்லி,
டெல்லி காவல்துறையின் குற்றப் பிரிவு தலைமைக் காவலரான நரேந்திரன் என்பவர் ஷகர்பூர் காவல் காலனியில் தனது காரில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஷகர்பூர் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு இன்று காலை 11:30 மணியளவில் நரேந்திரன் வந்துள்ளார். அவர் தற்கொலை செய்துகொள்வதற்காக துப்பாக்கியை குற்றப் பிரிவு அலுவலகத்தில் இருந்து எடுத்துச் சென்றுள்ளார்.
குடும்பப் பிரச்னையால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு டெல்லி காவல்துறையில் சேர்ந்த நரேந்திரன் திடீரென தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.