புதுடெல்லி,
டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, டெல்லியில் இன்று 1,056 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,32,275 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் இன்று 28 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,881 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 1,135 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,17,507 ஆக அதிகரித்துள்ளது. டெல்லி முழுவதும் தற்போது 10,887 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.