தேசிய செய்திகள்

டெல்லியில் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா - மேலும் 4,009- பேருக்கு தொற்று உறுதி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 4,009- பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 4,009- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்தார். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 10,986- ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பு விகிதம் 6.46 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 63,477- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவில் இருந்து 1509- பேர் குணம் அடைந்துள்ளனர். ஒமைக்ரான் பரவல் காரணமாகவே டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் கூடும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்