தேசிய செய்திகள்

தடுப்பூசி கிடைக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை : டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகள், தற்போதைக்கு திறக்க வாய்ப்பு இல்லை என டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் மனிஷ் சிசோடியா இந்தத் தகவலை தெரிவித்தார். மனிஷ் சிசோடியா கூறும் போது, தடுப்பூசி கிடைக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என்றார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது பல்வேறு கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள போதிலும் தொற்று பரவல் அதிகரிப்பதால், பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்