தேசிய செய்திகள்

டெல்லி யமுனை ஆற்றில் மீண்டும் அபாய எல்லையைக் கடந்த நீர்மட்டம்

டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் 206.56 மீட்டராக உயர்ந்து மீண்டும் அபாய எல்லையைக் கடந்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வடமாநிலங்கள் பல மழை, வெள்ள பாதிப்புகளில் சிக்கி தவிக்கின்றன. இன்று (திங்கள்கிழமை) மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் 206.56 மீட்டராக உயர்ந்து மீண்டும் அபாய எல்லையைக் கடந்துள்ளது. நேற்று இரவு 10 மணி அளவில் யமுனையின் நீர்மட்டம் 206.44 மீட்டராக இருந்த நிலையில் இன்று காலை சற்றே அதிகரித்து அபாய எல்லையை தாண்டி உள்ளது. யமுனையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் வெள்ளம் போல் தண்ணீர் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு