தேசிய செய்திகள்

டெல்லி; விபசார தொழிலில் ஈடுபட்ட உஸ்பெகிஸ்தானிய பெண்கள் கைது

டெல்லியில் விபசார தொழிலில் ஈடுபட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டு பெண்கள் 3 பேர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கிழக்கு டெல்லியின் பாண்டவா நகரில் சர்வதேச அளவிலான விபசார தொழில் நடைபெற்று வருகிறது என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இதனை தொடர்ந்து சஷி கார்டன் பகுதியில் உள்ள தனியார் நிறுவன ஓட்டல் ஒன்றில் போலீசார் சோதனை நடத்தினர்.

இதற்காக போலியாக, ஒருவரை வாடிக்கையாளர் போன்று ஓட்டலுக்கு உள்ளே அனுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். இதில், உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த 3 பெண்கள் சிக்கினர்.

இதேபோன்று, பிரவீன் குமார் மற்றும் கேத்தன் கன்சால் ஆகிய 2 புரோக்கர்களையும் போலீசார் பிடித்தனர். ஓட்டலின் 2வது தளத்தில் உள்ள அறையில் அவர்கள் இருந்தது தெரிய வந்தது. அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து