தேசிய செய்திகள்

எல்.கே.அத்வானியின் 94வது பிறந்தநாள்: பிரதமர், துணை ஜனாதிபதி நேரில் வாழ்த்து

எல்.கே.அத்வானியின் 94வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி இன்று தனது 94-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், எல்.கே.அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். அப்போது எல்.கே.அத்வானியின் இல்லத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனிருந்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், "மரியாதைக்குரிய அத்வானி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்துக்கும் பிரார்த்திக்கிறேன். மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும், நமது கலாச்சாரப் பெருமையை மேம்படுத்துவதற்காகவும் அவர் மேற்கொண்ட பல முயற்சிகளுக்காக தேசம் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது. அவர் தனது அறிவார்ந்த நோக்கங்களுக்காகவும், வளமான அறிவாற்றலுக்காகவும் பரவலாக மதிக்கப்படுகிறார்" என்று பதிவிட்டிருந்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து