தேசிய செய்திகள்

இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாட்கள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார். துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்பு, வெங்கையா நாயுடு அமெரிக்கா செல்வது இதுதான் முதல் தடவையாகும். தனது இரண்டு நாள் அமெரிக்க பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை ஜனாதிபதி பங்கேற்கிறார்.

குறிப்பாக சிகாகோவில் விவேகானந்தர் உரையாற்றியதன் 125-ஆண்டு நினைவாக, ஹிந்து காங்கிரஸ் என்ற அமைப்பு சிகாகோவில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெங்கையா நாயுடு உரையாற்றுகிறார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது