புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் இரவு முதல் விடிய விடிய பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது. சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சியளித்தது. இன்றும் மழை நீடிக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக டெல்லியில் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. ஜாகீர் நாயக் பகுதி உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் பல மீட்டர் தொலைவுக்கு அணி வகுத்து நின்றன.