தேசிய செய்திகள்

இந்தியா உள்பட 9 நாடுகளில் டெல்டா பிளஸ் மாறுபாடு கொரோனா பரவியுள்ளது- மத்திய அரசு

இந்தியாவில் அதிகம் பரவிய டெல்டா வைரசும் உருமாறி இருக்கிறது. இது ‘டெல்டா பிளஸ்' வைரஸ் என அழைக்கப்படுகிறது

தினத்தந்தி

புதுடெல்லி,.

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் முதன்முதலாக பி.1.617.2 என்ற உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரசுக்கு டெல்டா' என்னும் பெயரை உலக சுகாதார அமைப்பு சூட்டியது. இந்த டெல்டா வைரசும் உருமாறி இருக்கிறது. இது டெல்டா பிளஸ்' வைரஸ் என அழைக்கப்படுகிறது.இந்த வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படுமா என்ற கேள்வி ஏற்கனவே எழுந்துள்ளது.

இந்த நிலையில், டெல்டா பிளஸ் கொரோனா இந்தியா உள்பட 9 நாடுகளில் பரவியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:- டெல்டா மாறுபாடு கொரோனா 80 நாடுகளில் பரவியுள்ளது.

கவலை தரும் மாறுபாடு கொரோனாவாக டெல்டா கருதப்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, ஜபான், போலந்து, நேபாளம், சீனா மற்றும் ரஷ்யா உள்பட 9 நாடுகளில் டெல்டா பிளஸ் கொரோனா பரவியுள்ளது. இந்தியாவில் 22-பேர் டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரொனாவால் பாதிக்கப்பட்ட 22 பேரில் 16 பேர் மராட்டியத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் கேரளா, மத்திய பிரதேசம் மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு