பிரதமர் மோடி 2019 தேர்தலில் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். மிகப்பிரமாண்டமான பேரணியை நடத்தி வேட்பு மனுவை மோடி தாக்கல் செய்தார்.
ஆயிரக்கணக்கான தொண்டர்களிடம் பிரதமர் மோடி பேசுகையில், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் முதல் முறையாக ஆட்சிக்கு ஆதரவான அலை காணப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இந்த அரசின் மீது நம்பிக்கையை கொண்டுள்ளனர். இதற்கு முன்னதாக அரசுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போதுதான் செயல்படும் அரசை மக்கள் பார்க்கிறார்கள்.
நான் பிரதமர் எனக் கூறி, யாரையும் சந்திக்க மறுக்கவில்லை. பணியாளர்களை சந்திக்க மறுக்கவில்லை. பிரதமராகவும், எம்.பி.யாகவும் என்னுடைய பணி என்னவென்று எனக்கு தெரியும். மோடி வெற்றிப்பெறலாம், பெறாமலும் போகலாம், ஆனால் ஜனநாயகம் வெற்றியடையும். வாக்களிப்பில் நீங்கள் சாதனையை உடைக்க வேண்டும். பெண்களின் வாக்களிப்பு விகிதம் 5 சதவீதம் உயர வேண்டும், எனக் கூறியுள்ளார்.