தேசிய செய்திகள்

பெங்களூருவில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் இடித்து அகற்றம்

பெங்களூருவில் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

தினத்தந்தி

பெங்களூரு,

பெங்களூரு ககதாசபுராவில் உள்ள ஏரியை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தது. அந்த நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கும்படியும் பெங்களூரு மாநகராட்சிக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து ககதாசபுரா ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டிடங்கள், வீடுகளை இடித்து அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாகள், வருவாயத்துறை அதிகாகள் ஈடுபட்டனர்.

அதன்படி, ஏரியை சுற்றியுள்ள 1 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பகுதியில் கட்டப்பட்டு இருந்த கட்டிடங்கள், வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தை சுற்றி அதிகாரிகள் வேலி அமைத்துள்ளனர். இதில் ரூ.25 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்