தேசிய செய்திகள்

பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் என்ன பலன்? பிரதமர் அலுவலகம் பட்டியல்

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பலன்கள் குறித்து பிரதமர் அலுவலகம் பட்டியலிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அதிரடியாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து, மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து ஓராண்டு நிறைவு அடைந்துள்ளது.

இதையொட்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பலன்கள் குறித்து டுவிட்டரில் பிரதமர் அலுவலகம் பட்டியலிட்டுள்ளது. அது வருமாறு:-

* கடனுக்கான வட்டிவீதம் ஒரு சதவீதம் வரை குறைவு

* கடன் மலிவாகி உள்ளது.

* ரியல் எஸ்டேட் துறையில் மனை, வீடுகள் விலை குறைவு

* நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வரி வருவாய் 3 மடங்கு அதிகரிப்பு

* டிஜிட்டல் என்னும் ரொக்கமில்லா பண பரிமாற்றத்தால் கடன் அட்டைகள் பயன்பாடு 50 சதவீதம் உயர்வு

* ரொக்கமில்லா பண பரிமாற்றம், 48 சதவீதம் பெருக்கம்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை