பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 50 பயணிகளுடன் விமானம் ஒன்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு புறப்பட்டது. அந்த விமானம் ஓடுபாதையில் சென்றபோது, திடீரென்று கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தினார்.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டனர். விமானத்தில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.