தேசிய செய்திகள்

எதிர்ப்பை மீறி ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன்பகவத் தேசிய கொடியை ஏற்றினார்

கேரளமாநிலம் பாலக்காட்டில் உள்ள பள்ளியில் அரசின் எதிர்ப்பை மீறி ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன்பகவத் தேசிய கொடியை ஏற்றினார். #RepublicDay

தினத்தந்தி

பாலக்காடு

குடியரசு தின விழாவையொட்டி ஆர்எஸ்எஸ் இயக்க தலைவர் மோகன் பகவத், கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் கொடியேற்றுவார் என கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் கல்வி அதிகாரிகள் மட்டுமே தேசிய கொடியினை ஏற்ற வேண்டும் என கேரள அரசு சார்பில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

மேலும், அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களே கொடியேற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. இதனை நிராகரித்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, திட்டமிட்டபடி மோகன்பகவத் கொடியேற்றுவார் என அறிவித்தது.

இந்நிலையில் அந்த பகுதியில் கடும் பதட்டம் நிலவியது. இந்நிலையில் மாநில அரசின் எதிர்ப்பை மீறி இன்று காலை பாலக்காடு பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் மோகன் பகவத் தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது