தேசிய செய்திகள்

தேர்தலில் தோற்றாலும் சித்தாந்த போர் வீரியத்துடன் தொடர்கிறது: சுதர்சன் ரெட்டி

தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகிறேன் என்று சுதர்சன் ரெட்டி கூறினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

துணை ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, தேர்தல் முடிவுக்கு பிறகு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். நமது மாபெரும் குடியரசின் ஜனநாயக செயல்முறைகளில் நிலையான நம்பிக்கை கொண்டு, இந்த முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஜனநாயகம் வெற்றியால் மட்டுமல்ல, உரையாடல், கருத்து வேறுபாடு மற்றும் பங்கேற்பின் உணர்வாலும் பலப்படுத்தப்படுகிறது.

முடிவு எனக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் நாங்கள் கூட்டாக முன்னேற முயன்ற பெரிய நோக்கம் இன்னும் குறையாமல் உள்ளது. எங்கள் சித்தாந்த போராட்டம் எப்போதும் இல்லாத அதிக வீரியத்துடன் தொடர்கிறது. தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து