தேசிய செய்திகள்

பட்டாசு தடை இருந்தும்... டெல்லியில் காற்று தர குறியீடு மோசம்

டெல்லியில் பட்டாசுக்கு இந்த ஆண்டில் அனைத்து வகையில் தடை உள்ளபோதும் காற்று தர குறியீடு மோசம் என்ற அளவிலேயே உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் வெடிப்பதற்கு இந்த ஆண்டு டெல்லி அரசு தடை விதித்து உள்ளது.

இந்த தடையை மீறுபவர்களுக்கு அபராதமும், சிறை தண்டனையும் கூட விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வளவு நடவடிக்கைகக்கு பின்னரும், டெல்லியில் உள்ள மக்கள் இன்று காலை எழுந்ததும், புகையும், பனியும் படர்ந்த காற்று மாசுபாட்டுடன் கூடிய நகரையே பார்க்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ஒட்டுமொத்த டெல்லியில், காற்று தர குறியீடு மோசம் (276) என்ற அளவிலேயே இன்று உள்ளது. இவற்றில், டெல்லி பல்கலைக்கழக பகுதிகள் மற்றும் லோதி சாலை பகுதிகள் மிக மோசம் என்ற அளவில் முறையே 319 மற்றும் 314 என உள்ளன. மதுரா சாலை மற்றும் டெல்லி விமான நிலைய சுற்றுவட்டார பகுதிகள் முறையே 290 மற்றும் 245 என்ற அளவில் மோசமடைந்து உள்ளன.

டெல்லியை சுற்றிய பஞ்சாப், உத்தர பிரதேசம், அரியானா மற்றும் ராஜஸ்தானில் வேளாண் கழிவுகளை தீ வைத்து எரிப்பதும் காற்று தர குறியீடு மோசமடைந்து காணப்படுவதற்கான காரணிகளாக குறிப்பிடப்படுகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு