புதுடெல்லி
மும்பையில் பெய்த பெருமழையை சுட்டிக்காட்டிய அவர் பருவ கால மாற்றங்கள் மெதுவாக நடப்பவை என்றும் மும்பை போன்று நிகழ்வுகள் நடைபெறும்போதே எல்லோரும் இது பற்றி பேசுகிறார்கள் என்றார்.
இச்சூழலை சமாளிக்க புது தொழில்நுட்பங்கள் கண்டுபிடித்து தீர்வளிக்க வேண்டியுள்ளது என்றார் லூதர்ட்.
அமெரிக்கா பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகியதை ஒட்டியே ஸ்விஸ் அதிபர் இவ்வாறு கூறியுள்ளார். நமக்கு ஒரேயொரு கிரகம் மட்டுமேயுள்ளது. புவி வெப்பம் அதிகரித்தால் 2.8 கிரகங்கள் கிடைக்கும். நாம் விரைந்து செயல்பட்டு 2.8 கிரகங்களிலிருந்து ஒரேயொரு கிரகத்தினுள் வந்து விட வேண்டும் என்றார் அவர். ஐரோப்பிய நாடுகள் இந்தியாவை விட அதிகம் செயல்பட வேண்டும். அது நமது கடமை. நாம் அதைச் செய்ய வேண்டும். இளந்தலைமுறையினர் தொழில்மய நாடுகள் செய்தத் தவறை மீண்டும் செய்யக்கூடாது என்றார் அவர்.
ஸ்விஸ் நாடு 1960 ஆம் ஆண்டுகளில் நிலக்கரி பயன்பாட்டை நிறுத்தி விட்டது; மின் உற்பத்திக்கு அணுமின்சாரத்தை சார்ந்திருந்தது. இப்போது அணு உலைகள் அமைக்க அதிக செலவு பிடிப்பதால் புதிய அணுமின் நிலையங்களை அமைப்பதை நிறுத்தி விட்டோம். மேலும் அணுக்கழிவுகளை கையாள்வதும் சிக்கலாக இருக்கிறது என்றார் லூதர்ட்.