போபால்,
மத்திய பிரதேச மாநிலத்தில் ‘நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம்’(MPLAD) மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப் பணிகளை மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
“மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ரூபேட்டாவில் MPLAD திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப் பணிகளின் தொடக்க விழா மற்றும் பூமி பூஜை விழாவில் இன்று கலந்து கொண்டேன். அப்போது கர்நாடக கவர்னரும், முன்னாள் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் மந்திரியுமான தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து, திட்டத்தின் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடினேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.