பெங்களூரு,
பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது 6 மாத ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளை புத்தகமாக தயாரித்து வெளியிட்டுள்ளார். பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா அரசு ஒன்றும் புதிதாக அமையவில்லை. இதற்கு முன்பு எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்திருந்தது. தற்போது பா.ஜனதா ஆட்சியே தொடர்கிறது. ஒட்டு மொத்தமாக எடியூரப்பா, பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா அரசு 2 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது.
இந்த 2 ஆண்டுகளில் மாநிலத்தில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. மாநிலத்தில் எந்த சாதனையையும் பா.ஜனதா அரசு செய்யவில்லை. எடியூரப்பா தலைமையில் 2 ஆண்டுகளும், பசவராஜ் பொம்மை தலைமையில் 6 மாதங்களிலும் ஊழலில் ஈடுபட்டது மட்டுமே பா.ஜனதா அரசின் மிகப்பெரிய சாதனையாகும். ஊழலை தவிர மக்களுக்கான எந்த சாதனையும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.