தேசிய செய்திகள்

தேவேந்திர பட்னாவிஸ் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்

மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, தெற்கு மும்பையிலுள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதுபற்றி மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவிக்கையில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள பட்னாவிஸ் இன்று வீடு திரும்பினார். மேலும் சில நாள்களுக்கு அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து