திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெலுங்கு வருட பிறப்பான யுகாதியை முன்னிட்டு கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.
இந்த ஆழ்வார் திருமஞ்சனத்தில் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து பல்வேறு மூலிகை பொருட்களால் தயார் செய்யப்பட்ட கலவை கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியையொட்டி காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 மணி நேரம் பக்தர்கள் தரிசரத்திற்கு நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து காலை 11.30 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.