தேசிய செய்திகள்

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் மூலம் ஒரு மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம்

இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன் பெற்ற பக்தர்கள் சுமார் 1 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்கின்றனர்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழாவிற்கு பிறகு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பக்தர்கள் தரிசனத்திற்காக 48 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து அவதி அடைந்தனர். ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் பெற்றவர்கள் 5 மணி நேரத்தில் சாமியை தரிசனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் முறை கொண்டு வரப்பட்டது. அலிப்பிரி பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள கோதண்டராமசாமி சத்திரம் ஆகிய 3 இடங்களில் டைம்ஸ் லாக் டோக்கன் வழங்கி வருகின்றனர். டைம் ஸ்லாட் டோக்கன் வழங்குவதை அறியாத பக்தர்கள் நேராக திருமலைக்கு வந்து பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருப்பதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பனிப்பொழிவு அதிக அளவில் நிலவுகிறது. கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் பக்தர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன் பெற்ற பக்தர்கள் சுமார் 1 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்கின்றனர். டோக்கன் வாங்காமல் நேரடியாக செல்லும் பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதியில் நேற்று 51,376 பேர் தரிசனம் செய்தனர். 24,878 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.60 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...